சீனாவிடமிருந்து வந்த இலட்சம் டொலர்கள்
China
Dollars
Floods In Sri Lanka
World
By Thulsi
சீனாவினால் (China) அறிவிக்கப்பட்டிருந்த நிவாரண உதவிகள் இலங்கையிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான சீன தூதுவர் சீ சென்ஹொங், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் அந்த நிவாரண உதவிகளை கையளித்துள்ளார்.
அதற்கமைய, சீனா அரசாங்கத்தினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கான நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
10 மில்லியன் நிவாரண உதவி
அத்துடன் சீனா அரசாங்கத்தினால் 10 மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சீன செஞ்சிலுவை சங்கத்தினால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு அறிவிக்கப்பட்ட ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரணமும், இலங்கையில் உள்ள சீன வர்த்தக சமூகத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதியும் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஒதியமலைப் படுகொலை அன்றோடு முடிந்துவிடவில்லை! 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி