இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள சீனா: கல்வி முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையின் (Sri Lanka) பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்கான முன்மொழிவுக்குக்கு அமைய உதவிகளை வழங்க சீனா (China) அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்திய கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்மொழியபட்ட திட்டத்தில் கீழ், பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room), ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை (Receiving Class Room), குறித்த பணிகளை நெறிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கீழ் தரவு மையம் (Data Center), ஒளிப்பதிவு அறை (Studio Room), மாநாட்டு அறை (Conference Room) போன்றவற்றை வழங்க சீனா எதிர்பார்த்துள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
அத்தோடு, இந்த வளங்களின் மூலம், கலப்புக் கற்றல் முறைமையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்ளல், வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், விசேட திறன்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களின் அறிவை தேவையான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு வழங்கல், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் வேளைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்த்தல் மற்றும் மற்றும் உத்தேசக் கல்வி மறுசீரமைப்புக்களுக்காக வசதிகளை வழங்கல் போன்ற நடவடிக்கைகளை இலகுபடுத்திக் கொள்ள முடியும்.
அதேவேளை, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |