விமலின் பின்னணியில் சீனா..!
காலிமுகத்திடல் போராட்டத் தின் பின்னணியில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரே இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள கருந்தை காலிமுகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர்.
விமல் வீரவன்ச மீண்டும் சீனாவுடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான டானிஷ் அலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சீனாவுடன் விளையாட்டு
இதன்போது மேலும் கூறுகையில்,
விமல் வீரவன்ச 9 இல் மறைந்துள்ள கதை என்ற பெயரில் புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார். ஒருநாளாவது காலிமுகத்திடலில் வந்து நின்றாரா? என்று வீரவன்ச விடம் கேட்க வேண்டும்.
இந்தப் புத்தகத்தை வெளியிடும் போது சீனத் தூதுவர் முன்னால் அமர்ந்திருந்தார். அவர் உத்தர லங்காவின் அனைத்து நிகழ்வுகளுக்கும் வருகின்றார்.
விமல் என்பவர் எங்களுக்கு வேடிக்கையானவர். கோத்தா போவதற்கு முன்னர் நாங்கள் பாய்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் ஒரு அசிங்கமான அமெரிக்கர் என்றும் கோத்தாவை விமர்சித்து மெதுவாக நழுவினர்.
பின்னர் சீனாவுடன் விளையாட்டுகளை ஆரம்பித்துள்ளனர். இதில் நாங்கள் சிக்க மாட்டோம்." என்றார்.
