செயற்கைகோள் மூலம் செல்போன்களை இயக்கும் சோதனை வெற்றி! சீனா சாதனை
தொலைபேசிகளுக்கான சமிக்ஞை கோபுரம் (Cellphone Tower) இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக தொலைபேசிகளில் பேசும் வசதியை கொண்டு வரும் சீனாவின் ஆய்வு தற்போது வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனைகளை சீனா நடத்தி வந்தது, தற்போது இந்த சோதனைகள் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தரையில் தொலைபேசிகளுக்கான சமிக்ஞை கோபுரங்கள் இல்லாமல் தொலைபேசிகளில் பேச முடியும் என்று கூறப்படுகிறது.
செயற்கைக் கோள் இணைப்பு
இதன் மூலமாக நவீன தொலைபேசியூடான தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை ஏற்படுத்தி, சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் தொலைபேசிகளை செயற்கைக்கோள்கள் வழியாக இனி பேச முடியும் என குறிப்பிட்டுள்ளது.
இயற்கை சீற்றங்கள்
தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதனால் இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளது மாத்திரமல்லாமல் தொழில்நுட்பத்திரையில் சீனாவுக்கு இது ஒரு மைல்கள் அடைவதாகவும் பார்க்கப்படுகின்றன்மை குறிப்பிடத்தக்கது.
[NNCOL9C
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |