சீனா அடையாளப்படுத்திய ஆசிய இருப்புக்கு போட்டியாகியுள்ள அறுகம்குடா
இந்து சமுத்திரத்தில் தனது நிலைகளை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில், சீனாவின் காய்நகர்த்தல்கள் என்பது அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய இராஜதந்திர சவாலாகும்.
குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகம் வர்த்தகம், பாகிஸ்தானில் தனது இருப்பை சீனா அடையாளப்படுத்திய விடயங்கள் அமெரிக்காவின் ஆசியா மீதான இருப்புக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தகூடும்.
அந்த வகையில் சீனாவுக்கு எதிராக ஆசியாவில் தனது இருப்பை தக்கவைக்க அமெரிக்கா மேற்கோள்ளும் முயற்சிகள் இலங்கையை மையப்படுத்தியதாய் காணப்படுகின்றன.
இதில் குறிப்பாக இலங்கையின் கிழக்கு கடலில் அமெரிக்கா தனது நிலையை தக்கவைக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியின் மூலம் ஆராய்ந்தபோது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன், அறுகம்குடா தொடர்பிலான முக்கிய விடயமொன்றை எம்மோடு பகிர்ந்திருந்தார்.
அமெரிக்கா, சீனாவை நோட்டமிடவும், இலங்கை மற்றும் ஆசியா மீதான இருப்பை சவால் செய்யவும் அவர்கள் அறுகம்குடா கடலை மையப்படுத்தியுள்ளதாக அவர் கூறியள்ளார்.
இந்நிலையில் ஆசியாவில் சீனா தனது இருப்பை தக்கவைக்க வளர்த்துக்கொள்ளும் நுட்பமுறைகளையும், அதனை சவால்செய்ய அமெரிக்க முன்னெடுக்கும் விடயங்களையும் விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
