உலக செஸ் சாம்பியன் போட்டி: குகேஷிடம் சீன வீரர் வேண்டுமேன்றே தோற்றதாக குற்றச்சாட்டு!
உலக செஸ் சாம்பியன் போட்டியில் சீன வீரர் டிங் லிரென் வேண்டுமேன்றே தோற்றதாக சந்கேம் ஏற்படுவதாக ரஷ்ய செஸ் பெடரேசன்(Russian Chess Federatio) தலைவர் அன்ட்ரெய் பிளாடோவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அத்துடன், இறுதிப் போட்டி குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அன்ட்ரெய் பிளாடோவ் தெரிவிக்கையில்"கடைசி ஆட்டத்தின் முடிவு தொழில் வல்லுநர்கள் மற்றும் செஸ் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
சீன சதுரங்க வீரரின் தோல்வி
முக்கியமான சுற்றில் சீன வீரர் டிங் லிரெனின் செயல் மிகவும் சந்தேகத்திற்குரியவை. இது தொடர்பாக சர்வதேச செஸ் பெடரேசன் தனி விசாரணை நடத்த வேண்டும்.
டிங் லிரென் இருந்த நிலையை இழப்பது (சாம்பியன் பட்டத்தை) முதல் தர வீரருக்குக் கூட கடினம்.
இன்றைய ஆட்டத்தில் சீன சதுரங்க வீரரின் தோல்வி நிறைய கேள்விகளை எழுப்புகிறது.மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரிகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
குகேஷின் சாதனை
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று(12) நடைபெற்றுள்ளது.இந்த போட்டியில், தமிழக வீரரான டி. குகேஷ் சீனாவின் டின் லிரேனை எதிர்கொண்டார்.
14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்ததுடன் 9 சுற்றுகள் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
The emotional moment that 18-year-old Gukesh Dommaraju became the 18th world chess champion 🥲🏆 pic.twitter.com/jRIZrYeyCF
— Chess.com (@chesscom) December 12, 2024
இந்த நிலையில், நேற்று(12) நடைபெற்ற 14ஆவது சுற்றில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பதால் இருவரும் வெற்றிக்காக போராடினர்.
சுமார் 3 மணி நேர போட்டிக்குப் பிறகு லிரென் போட்டியை சமநிலை செய்ய முயற்சித்தார்.
எனினும் 58ஆவது காய் நகர்த்தலுக்குப் பிறகு குகேஷ் வெற்றியடைந்தார். இதனால் 18 வயதான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
