கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பெண் தொழிலதிபர்!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீனப் பெண் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய சீன பெண் தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (29-06-2026) இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு சிகரெட்டுகள்
இலங்கைக்குள் பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இன்று அதிகாலை 12:30 மணியளவில் சீனாவின் குன்மிங்கில் (Kunming) இருந்து சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் (China Eastern Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தை வந்தடைந்த அவர், சுங்கப் பிரகடனங்கள் எதுவும் இல்லாத பயணிகள் வெளியேறும் பச்சை வழிவழியை (Green Channel) பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுங்க அதிகாரிகள்
இந்தநிலையில் சுங்க அதிகாரிகள் அவரது பொருட்களை (Luggage) சோதனையிட்ட போது அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140 கார்டன்களில் அடங்கிய 28,000 சீன தயாரிப்பு சிகரெட் துண்டுகள் கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட இந்த சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் 4.2 மில்லியன் (42 இலட்சம்) ரூபா என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீனப் பெண் சுங்கக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை சுங்கத் திணைக்களம் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்