தாய்வான் அருகே பதட்டம் பாரிய இராணுவ பயிற்சியை ஆரம்பித்தது சீனா
ஜேர்மன் மற்றும் லிதுவேனிய அரசியல்வாதிகள் குழு தாய்வானுக்குச் செல்லவுள்ள நிலையில், தாய்வான் அருகே இராணுவப் பயிற்சியை சீனா அறிவித்துள்ளது.
பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கையாக சீனா இந்த இராணுவ பயிற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தாய்வானை சுற்றிவர பாரிய பயிற்சி
இந்த பயிற்சியை மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) கிழக்குக் கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கேணல் ஷி யி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
இந்தப் பயிற்சியில் தாய்வானைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளி நடவடிக்கைகள், தரைவழித் தாக்குதல்கள் மற்றும் கடற்படை மற்றும் தரைவழித் தாக்குதல் வாகனங்களைப் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
பிரிவினைவாதிகளின் ஆத்திரமூட்டல்களை எதிர்க்க
படைகளின் ஒருங்கிணைந்த போர் திறன்களை சோதிப்பதற்காகவும், தாய்வானின் சுதந்திரத்திற்காக வெளி சக்திகள் மற்றும் பிரிவினைவாதிகளின் ஆத்திரமூட்டல்களை உறுதியுடன் எதிர்ப்பதற்காகவும் இந்தப் பயிற்சி என்று சீனா கூறியுள்ளது.