ட்ரம்புடன் உச்சக்கட்ட முறுகல் - சீன ஜனாதிபதியை சந்திக்கும் கனேடிய பிரதமர்
கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் கார்னி இன்று 16ம் திகதி சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வர்த்தக வரிகள் மற்றும் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், கனடா தனது பொருளாதாரத்தை வேறுபடுத்தும் முயற்சியை மேற்கொள்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்
இதன் நிமித்தம், கனேடிய பிரதமர் சீனாவுக்கு சென்றுள்ளார். கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) சீனாவுக்கு மேற்கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக இது கருதப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்காவை மட்டுமே அதிகம் சார்ந்திருப்பதைக் குறைத்து, சீனாவின் புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள பிரதமர் கார்னி திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், சீன ஜனாதிபதியை பிரதமர் மார்க் கார்னி இன்று பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசுகிறார். இது சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கனேடிய பிரதமர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.
இந்த பயணத்தின் போது, வர்த்தக உறவு, வலு சக்தி (Energy), விவசாயம் மற்றும் விநியோகச் சங்கிலி (Supply Chain) போன்ற துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |