இந்த நாட்டை சேர்ந்தவாரா நீங்கள்...! ரஷ்யா வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
சீன குடிமக்களுக்கு பல பிரிவுகளில் 30 நாட்கள் வரை ரஷ்யாவிற்கு விசா இல்லாத அனுமதியை வழங்கும் ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல பிரிவினர் இதனால் பயன்பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2022 இல் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனுக்கு அனுப்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு புடினும் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் வரம்புகள் இல்லை என்ற புதிய கொள்கையின் அடிப்படையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
புதிய கொள்கை
இருப்பினும், மேற்கத்திய நாடுகளின் தடைகளை எதிர்கொள்ள ரஷ்யா அப்போதிருந்து சீனாவிடமிருந்து இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளது.
முன்னதாக ரஷ்ய குடிமக்களில் பல பிரிவினருக்கு சீனாவிற்கு விசா இல்லாத அனுமதியை வழங்குவதற்கான சீனாவின் நடவடிக்கையை அடுத்தே புடின் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அத்தோடு, புதிய ரஷ்ய விதிகள் செப்டம்பர் 14 ஆம் திகதி 2026 வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், புதிய விதிகள் சீன புலம்பெயர்ந்தோர், நீண்டகால மாணவர்கள் அல்லது தளவாடங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு பொருந்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15 முதல் ஒரு வருடத்திற்கு சாதாரண ரஷ்ய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு 30 நாட்கள் வரை விசா இல்லாத பயணத்தை வழங்குவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |