சீன அதிபரின் சிறப்பு தூதுவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கை வருகை !
சீன அதிபர் சீ ஜின்பிங்கின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(18) மாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இருதரப்பு கலந்துரையாடல்
எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட குழுவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகர் திட்டம், ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல்வேறு சீன முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் அரச தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதுடன், கண்டி தலதா மாளிகை உள்ளிட்ட பல இடங்களுக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்