இலங்கை தெய்வேந்திரமுனையில் சீனாவின் ராடர் தளம்
இலங்கையின் தென்பகுதியில் தெய்வேந்திர முனையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சீனா புதியதொரு ராடர் தளத்தை நிறுவ முனைவதான செய்திகள் சிறிலங்காவின் உளவுத்துறையின் ஆதாரங்களின் அடிப்படையில் வந்துள்ளன.
ஆனால் இந்த விடயம் குறித்து இதுவரை சிறிலங்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தத்தமது தரப்புகளில் இருந்து எதிர்வினைகளை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
இந்தச் செய்தியை இந்த மூன்று நாடுகளும் உறுதிப்படுத்தவும் இல்லை - மறுத்துக் கொள்ளவும் இல்லை.
ஆயினும் ஊடகக் கசிவுகள் வந்திருக்கின்றன.
சீனா தனது அறிவியல் கழகத்தின் வான்வழி தகவல் ஆய்வு நிறுவனத்தின் மூலம் இந்த ராடர் தளத்தை உருவாக்குவதற்கு முனைப்பு காட்டுவதாகவும், இவ்வாறான ஒரு தளத்தை உருவாக்கிக் கொண்டால் இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்கள் உளவு பார்க்கப்படலாம் என்ற அச்சத்தை பிரித்தானிய ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ஆனால் இவ்வாறான சீனாவின் தளத்தை இலங்கைத் தீவின் தென்பகுதியில் அமைத்துக் கொள்ள இந்தியா அனுமதிக்கப் போவதில்லை என்பதும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயம்.
இந்த விவகாரத்தை விரிவாக ஆராகிறது என்று இன்றைய செய்தி வீச்சு,
