ஆராதனை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பாதிரியார் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் துயரம்
பாகிஸ்தானில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிஷப் வில்லியம் சிராஜ் மற்றும் பாதிரியார் நயீம் பற்றிக் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட பிஷப் வில்லியம் சிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதிரியார் நயீம் பற்றிக் காயமடைந்தார். த
கவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றவாளிகளை பிடிக்க நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீதான இந்த சமீபத்திய தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
