எயார்பஸ் விவாரம் : P.B. ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்
Bribery Commission Sri Lanka
Ministry of Finance Sri Lanka
P. B. Jayasundera
Airbus Bribery Scam
By Sathangani
முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் P.B. ஜயசுந்தரவிடம், இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிக்கவரட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுமார் 4 மணிநேரம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாமல் ராஜபக்சவிற்கு விளக்கமறியல்
குறித்த எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |