யாழ். இந்துக் கல்லூரி அதிபர் மீதான அவதூறு வழக்கு ! எதிராளி சார்பில் முன்னிலையான தயாசிறி

Jaffna Hindu College Jaffna
By Theepan Sep 30, 2026 06:28 PM GMT
Report

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறனுக்கு எதிராக, வி.ஜனகனினால் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக்குப் புறம்பான பதிவுகளுக்கு எதிராக, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு 29.09.2026 (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகத் தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த காணொளியை எதிர்மனுதாரரான ஜனகன் விநாயகமூர்த்தி நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையில் சமரசமான அணுகுமுறையை ஏற்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, வழக்கு விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

முகநூலில் காணொளி

முன்னதாக, "யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சைவ சமய அடையாளங்களைப் பள்ளி வளாகத்திலிருந்து அழித்து அகற்றுகின்றார். அவர் மத நம்பிக்கையற்றவர்.

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் மீதான அவதூறு வழக்கு ! எதிராளி சார்பில் முன்னிலையான தயாசிறி | Jaffna Hindu College Principal Defamation Case

பாடசாலையின் பாரம்பரியத்தை நிராகரிக்கின்றார்" என்று குற்றம்சாட்டி ஜனகன் விநாயகமூர்த்தியினால் முகநூலில் காணொளியொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இக்காணொளியை உடனடியாக நீக்குமாறும், இது தொடர்பாக அதிபரிடம் மன்னிப்புக் கோருமாறும், எதிர்காலத்தில் இதுபோன்ற காணொளிகளை வெளியிடமாட்டேன் என உத்தரவாதம் அளிக்குமாறும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் நிபந்தனைக் கட்டளை பிறப்பித்திருந்தது.

29.09.2026 அன்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் நேரில் முன்னிலையான ஜனகன் விநாயகமூர்த்தி, நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கி அக்காணொளியை ஏற்கனவே நீக்கிவிட்டதாகத் தெரிவித்தார்.

ஷிரந்தி நாடு திரும்பத் தவறினால் ஏற்படப்போகும் விளைவு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஷிரந்தி நாடு திரும்பத் தவறினால் ஏற்படப்போகும் விளைவு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இணக்கமான முடிவு

மேலும், காரணங்காட்டுவதற்காக அவகாசம் கோரிய அவர், அதிபரிடம் மன்னிப்புக் கோருவது உள்ளிட்ட விடயங்களில் இரு தரப்பும் ஓர் இணக்கமான முடிவை எட்டுவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இரு தரப்பின் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட நீதிவான், சமரச முயற்சியை மேற்கொள்வதற்காக வழக்கை ஒத்திவைத்தார்.

இவ்வழக்கில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் சார்பாக மூத்த சட்டத்தரணிகளான வி.திருக்குமரன், கலாநிதி கு.குருபரன் ஆகியோருடன் மேலும் 12 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

வி.ஜனகன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, என்.கே.அசோக்பரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019