சூடு பிடிக்கும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: அசாத் மௌலானாவிடம் அறிக்கை பெற பிரான்ஸ் பறந்தது சி.ஐ.டி
CID - Sri Lanka Police
Pillayan
Easter Attack Sri Lanka
France
By Jaso
தற்போது ஈஸ்டர் தாக்குதல் விசாரணை வேகமெடுத்து வரும் நிலையில் பிள்ளையானின் முன்னாள் பேச்சாளரான அசாத் மௌலானாவிடம் விசாரணை நடத்த சி.ஐ.டி குழு பிரான்ஸிற்கு சென்றுள்ளது.
காவல்துறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழு ஒன்றே பிரான்சுக்குப் பயணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம்
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விரிவான விசாரணையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் மற்றும் வெளிப்படுத்தல்கள் குறித்து, அசாத் மௌலானாவிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் வாக்குமூலங்களையும் விளக்கங்களையும் கோரி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்