பாடசாலை மாணவியை தகாத முறைக்குட்படுத்திய இளைஞன் கைது
மஹியங்கனை களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை தகாத முறைக்கு உட்படுத்தியதாக கூறி நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பூஜா நகரைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து தகாத முறைக்கு உட்படுத்தியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
முறைப்பாடு
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி இன்று(06) பதுளை சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் சந்தேக நபர் இன்று(06) பதுளை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |