மட்டக்களப்பில் குழுக்களுக்கிடையில் மோதல் - ஒருவர் வைத்தியசாலையில்
Batticaloa
By Vanan
மட்டக்களப்பு - புதூர், சேத்துக்குடா பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்கள் காரணமாக இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பலதடவை மோதல்

கடந்த சில காலமாக இரு குழுக்களுக்கும் இடையில் பலதடவை மோதல்கள் ஏற்ப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதிபலனாக இன்று இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.