முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க இதை செய்தால் மட்டும் போதும்!
நம்மில் அதிகமானோருக்கு சருமம் பற்றிய கவலை இருக்கும் ஆனால் அதனை எவ்வாறு பராமரிப்பது என்பது தெரியாது.
எமது சருமம் அழகாக ஜொலிக்க மட்டுமல்ல, ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டவும் பொலிவுடன் இருப்பது அவசியம்.
இதிலும் முகத்தில் பருக்கள் உண்டாவது மிகப்பெரிய பிரச்சினையாகும், பருக்கள் உண்டான பிறகு ஏற்படும் கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்கும் விதமாக உள்ளன.
முக அழகு
இதனால் பெரும்பாலோனோர் தேவையற்ற கிரீம்களையும் செயற்கை இரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர்.
இதனால் தற்காலிக தீர்வுகள் கிடைத்தாலும், நிரந்தர தீர்வுகள் கிடைக்காது, எனவே இயற்கையான பொருட்களை வைத்து எவ்வாறு இதற்கு தீர்வு காணலாம் என பார்க்கலாம்.
எளிய வீட்டு வைத்தியம்
கடலை மா மற்றும் தக்காளி சாறு இரண்டுமே முகத்திற்கு பொலிவு தரக்கூடியது. எனவே அவற்றை சம அளவில் எடுத்து கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவவும்.
இதை 20 நிமிடங்கள் முகத்தில் நன்கு உலரவைக்க வேண்டும். இறுதியாக பருத்தி மற்றும் சுத்தமான தண்ணீரின் உதவியுடன் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வர கரும்புள்ளிகள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |