இலங்கையில் நீடிக்கும் காலநிலை மாற்றம்! சரிவில் சிக்கி மூவர் உயிரிழப்பு
srilanka
colombo
death
peoples
climate
By S P Thas
கேகாலை, ரம்புக்கனை – தொம்பேமட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் மூவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மண்மேடு ஒன்று சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் அவ்வீட்டிலிருந்த குறித்த மூவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்சரிவில் சிக்கிய வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் கடுமையான மழை பெய்துவருவதால், பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.