உயிர் பறிக்கும் மது..! நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (3) மூடப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினம் முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது .
சமூக மற்றும் உளவியல் விளைவுகள்
மது பாவனை உலகளாவிய சவாலாக மாறியுள்ள நிலையில், சர்வதேச மது ஒழிப்பு தினம் (International Day Against Alcohol Abuse and Illicit Trafficking) ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 3ஆம் திகதி உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
இது மதுவின் தீமைகள், அதன் சமூக மற்றும் உளவியல் விளைவுகள், மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான நாள் ஆகும்.
இலங்கையில், மது பாவனை அதிகரித்து வருகிறது. 2023ஆம் ஆண்டில், இலங்கையின் மது பாவனை சுமார் 5,000 மெட்ரிக் தொன் ஆகும்.
இது 2028ஆம் ஆண்டுக்குள் சுமார் 5,240 மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இலங்கை உலகளவில் 95வது இடத்தில் உள்ளது.
நோய்களால் அகால மரணம்
மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர்.
மது பாவனையால் தினமும் சுமார் 50 இலங்கையர்கள் மரணமடைகின்றனர் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித் துள்ளது
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு நிதியம் நடத்திய ஆய்வின்படி, 2023 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் மது அருந்துவதால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார செலவுகள் ரூ. 237 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (3) நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று இலங்கை மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
