தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு 148 புதிய வீடுகள்: முதலமைச்சர் விஜய் திறந்து வைப்பு
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகள், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு நேற்று (26.11.2026) இடம்பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியதாக இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
வீடமைப்புத் திட்டம்
இதன்போது, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான திறப்புகள் உரிய பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழ் அகதிகளின் மறுவாழ்வு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் தமிழக அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |