நல்லூர் மாவீரர் மண்டபத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தாயார் பொதுச்சுடர்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்னால் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில், பண்டிதரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றி மாவீரர் நாள் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவீரர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தி, சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
தமிழர் தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி