மக்களே அவதானம்..! ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Sri Lanka
Climate Change
Weather
Landslide
By Pavi
திர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை (செம்மஞ்சள்) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு முதலாம் நிலை (மஞ்சள்) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்
எனவே, மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி