மற்றுமொரு நுண்ணுயிர் கொல்லி மருந்திற்கு தடை - சுகாதார அமைச்சர் அறிவிப்பு
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By pavan
Co-amoxiclav எனப்படும் நுண்ணுயிர் கொல்லி மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர், குறித்த நுண்ணுயிர் கொல்லி மருந்து செலுத்தியதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆராய நிபுணர் குழு

குறித்த 21000 தடுப்பூசிகளை கொண்ட மருந்து தொகுதியிலிருந்து 18000 தடுப்பூசிகள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் ஒரு தடுப்பூசி தொடர்பில் மாத்திரமே இந்நிலை பதிவாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மூலமாகவும் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.