புற்றுநோய் தேங்காய் எண்ணெய் இறக்குமதி -உயர் பௌத்தபீடம் விடுத்துள்ள எச்சரிக்கை
புற்றுநோய்களைக் கொண்ட தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தமை தொடர்பில் பௌத்தபீடத்தின் உயரிய மகா சங்கம் தனது கருத்தை தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த வணிகர்கள் எந்தவிதமான பாகுபாடும் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீட துணை பதிவாளர் வண.நாரம்பனாவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்..
அத்தகையவர்கள் ஒருபோதும் தங்களைத் தற்காத்துக் கொள்ள முன்வரக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் நாட்டிற்கு விஷ உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அவ்வப்போது பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர்.
ஆனால் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரத்தில் உள்ளவர்களும் எந்த நடவடிக்கையும் எடுப்பதை நாங்கள் காணவில்லை.அத்தகையவர்களைக் கண்டுபிடித்து முறையாக தண்டிக்க வேண்டும்.
இத்தகைய தவறான செயல்களைச் செய்பவர்கள், தங்கள் தரத்தைப் பொருட்படுத்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்பது இந்த நாட்டில் உள்ள மகா சங்கத்தின் கருத்து. ” என அவர் மேலும் தெரிவித்தார்.