கடமையில் அலட்சியம் காரணமாக மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்
கொழும்பு நகருக்குள் உள்ள காவல் நிலையமொன்றில் கடமையில் அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டில் மூன்று காவல்துறையினர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கொழும்பு -13 ஆட்டுப்பட்டித் தெரு காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் ஆகியோரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் அலட்சியம்
கொழும்பு ஜிந்துப்பிட்டியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களுக்கு ஆட்டுப்பட்டித் தெரு காவல்நிலையத்தில் வைத்தே அடையாளம் தெரியாத நபரொருவரினால் பால் பக்கெற்றுக்குள் நஞ்சு கலந்து பருகக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை அருந்திய சந்தேக நபர்கள் இருவரும் தற்போது தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பணி இடைநீக்கம்
மேற்குறித்த சம்பவம் காவல்துறையினரின் அலட்சியம் காரணமாக நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஆட்டுப்பட்டித் தெரு காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி, சம்பவத்தின் போது கடமையில் இருந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |