கொழும்பில் பிரித்தானிய யுவதியை அடுத்து ஜேர்மன் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
கொழும்பு(colombo), கொள்ளுப்பிட்டி பகுதியில் தங்குமிட விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது 24 வயதான பிரித்தானிய(uk) யுவதி உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜேர்மன்(germany) நாட்டைச் சேர்ந்த பெண்ணும் இன்று (03) உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதியில் தங்கியிருந்த ஒரு பிரித்தானிய பெண் மற்றும் ஜேர்மன் தம்பதியினருக்கும் திடீரென வாந்தி ஏற்பட்டதால், அவர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது பிரித்தானிய யுவதி உயிரிழந்தார்.
நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாக உயிரிழப்பு
இந்தநிலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜேர்மன் பெண்ணும் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நச்சு வாயுவை சுவாசித்ததன் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே விசாரணை முடிவடையும் வரை குறித்த விடுதி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |