கொழும்பில் சகோதரிகள் உட்பட மூன்று சிறுமிகள் மாயம் (படம் இணைப்பு)
colombo
missing
children
By Sumithiran
கொழும்பு - புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் நேற்று முதல் முதல் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் காவல்துறையினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
13 வயதிற்கும் 15 வயதிற்கும் உட்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் மற்றும் உறவுக்கார சகோதரி ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் சிறுவர்களின் பெற்றோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.