சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சுகாதார ஊழியர்களால் ஆர்ப்பாட்டம்
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார ஊழியர்களால் இன்று(12) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளுக்கு எதிராகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நிதி அமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அண்மை நாட்களில் அரசாங்கம் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது.
சுகாதார ஊழியர்களால் ஆர்ப்பாட்டம்
எனினும், சிறிலங்காவின் சுகாதார துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் இதுவரை அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கம் நித்திரையில், ஊழியர்கள் நடுத்தெருவில், நோயாளர்கள் மரணபடுக்கையில் போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு வாரகால அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |