ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்! அதிரப்போகும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றம்

colombo mahinda yapa abeywardena bomb blast
By Vasanth Mar 18, 2021 05:46 PM GMT
Report

எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நேற்று முற்பகல் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 10ஆம் திகதி ஆரம்பமான ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை மார்ச் 25 மற்றும் 26ஆம் திகதி ஆகிய தினங்களில் தொடர்வதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

மார்ச் 23ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய பின்னர் 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்படும்.

அன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எழுப்பப்படும் 10 கேள்விகளுக்காக இந்நேரம் ஒதுக்கப்படும். அதன் பின்னர் முற்பகல் 11 மணி முதல் மாலை 4.30 மணிவரை சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10ஆவது சரத்தின் கீழ் இறக்குமதி வரி குறித்த பிரேரணை, ஏற்றுமதி இறக்குமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். அன்றையதினம் மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தில் பிரேரணை விவாதமும் இடம்பெறும் என தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

மார்ச் 24ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முற்பகல் 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர் மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் இடம்பெறும். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் மார்ச் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் மீண்டும் நடைபெறும். மார்ச் 25ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் 11 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளபோதும்,

மார்ச் 26ஆம் திகதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும் 27(2) நிலையியற் கட்டளையின் கீழான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்படாது முற்பகல் 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை முழு நேரமும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்துக்கு ஒதுக்க நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், அன்றைய தினத்துக்காக ஒத்திவைக்கப்படும் வாய்மூல கேள்விகள் குறித்து எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பியதற்குப் பதிலளித்த சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிடுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைகளுக்கான கேள்விகளுக்குப் பதில் வழங்குவதற்காக எதிர்வரும் தினம் ஒன்றை அல்லது இரண்டு தினங்களை ஒதுக்குவதாகவும் கூறினார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான தகவல்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்துவது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்