பொலிஸாரின் இடமாற்ற உத்தரவு நிறுத்தப்பட்டது! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்
பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்படவிருந்தனர்.
எனினும், நாட்டில் நிலவி வரும் கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமை காரணமாக இடமாற்ற உத்தரவுகள் இடைநிறுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி, இடமாற்ற உத்தரவுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதியின் பின்னர் அமுலாகும் என அறிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இடமாற்ற உத்தரவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.