கொழும்பு துறைமுக சட்டமூலம் - உச்சநீதிமன்றின் பரிந்துரையுடன் உடன்பட்டது அரசு
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைகளுடன் உடன்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் முடிவை வெளிப்படுத்திய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இந்த சட்டமூலத்தை தேவையான திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்டமூலம் மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில உட்பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தார்.
திருத்தம் செய்யப்பட்டால் அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால் அதை செல்லுபடியாக்க முடியும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் சட்டமூலத்தை நிறைவேற்ற சிறப்பு பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு தேவைப்படும் என்றும் மஹிந்த யாபா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.