இளைஞனுக்கு எமனான வடிகான் - இன்று இடம்பெற்ற துயரம்
police
colombo
death
By Jaso
வெட்டப்பட்ட வடிகானில் மண் சரிந்து வீழ்ந்ததில் 19 வயதான இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு – பேஸ்லைன் வீதியில் கிருலப்பனை எட்மண்டன் வீதியில் இன்று காலை இந்த துயரம் சம்பவம் பதிவானது.
இந்த அனர்த்தத்தில் வடிகான் வெட்டிக்கொண்டிருந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
இளைஞரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.