நகைச்சுவையான படம் நடித்துள்ளார் கோட்டாபய? சாணக்கியன் கிண்டல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உரையென்று கூறிக்கொண்டு நகைச்சுவை படம் ஒன்றினை 10 நிமிடங்கள் நடித்துள்ளார்.
இந்த அரசாங்கம் மக்கள் நலன் தொடர்பில் சிந்திக்காத அரசாங்கம் என்பதற்கு உதாரணம் அந்த உரையினைத்தவிர வேறு எதுவும் தேவையில்லை என்கிறார் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்.
தனது அலுவலகத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதிகோரிய கறுப்புக்கொடி போராட்டத்திற்கு பின், செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,
அனைத்து இன, மத மக்களும் இணைந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான உண்மையினை கண்டுபிடிக்க அழுத்தங்களை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.