யாழ்.பல்கலையில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் நிகழ்வு
இந்தியப் படைகளின்(indian army) ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின்(annai poopathy) நினைவேந்தல்கள் யாழ். பல்கலைக்கழகத்தில்(university of jaffna) இன்றையதினம்(19) இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் 37வது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி
இதன்போது அக வணக்கம் செலுத்தப்பட்டு, அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் அன்னை பூபதி தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதி அவர்களது 37வது நினைவுதினம் இன்று(19) காலை திருகோணமலை(trincomalee) வரோதய நகரில் நினைவுகூரப்பட்டது.
உருவப்படத்திற்கு விசேட பூஜை வழிபாடுகள்
குறித்த பகுதியில் உள்ள தமிழ் மக்களால் அன்னை பூபதி மறைந்த தினமான இன்று அவரது உருவப்படத்திற்கு விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பொதுமக்களுடன் திருகோணமலையின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





