உயிர்த்த ஞாயிறு அறிக்கை : நாடாளுமன்றில் கேள்வி எழுப்பும் சாணக்கியன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கைகள் ஏன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் (Shanakiyan Rasamanickam) கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (09.07.2025) 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இதன்போது, "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஏதோ கூறியுள்ளார். அதாவது, ஒரு அரசாங்கத்தால் ஒரு அரசாங்கத்தை ஆராய்வதில் சிரமம் உள்ளது.
புலனாய்வு அதிகாரிகள்
இன்று ஜூலை 9 கோட்டாபய நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நாள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடப்பதற்கு முன்பே அவற்றின் பின்னணியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக நிறைய தகவல்கள் உள்ளன.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் புலனாய்வு அமைப்புகள் சில குழுக்களை உருவாக்கியதாக ஜனாதிபதி அநுர குமாரவும் கூறியுள்ளார்.
அந்தக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. புலனாய்வு அதிகாரிகள் அந்த அடையாள அட்டைகளில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த அடையாள அட்டைகளை நான் தாக்கல் செய்வேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
