மோடி சந்தித்த கையோடு அமெரிக்க வரி விவகாரத்திற்கு விரைந்த அநுர
அமெரிக்காவின் புதிய வரிகள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வரிகள் விதிக்கப்படும்போது ஒரு நாடாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சாத்தியமான நிவாரணம்
இந்த விடயத்தில் சாத்தியமான நிவாரணம் குறித்து இலங்கை அரசாங்கம் விரைவில் அமெரிக்க அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் ஏ. விமலநேத்திரராஜா, ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் மங்கள விஜேசிங்க என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 16 மணி நேரம் முன்
