இலங்கையில் கணினி கல்வியறிவில் பாரிய முன்னேற்றம்: ஆய்வில் வெளியான தகவல்
இலங்கையில் (srilanka) கணினி அறிவாற்றல் 39 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் (Department of Census and Statistics) தெரிவித்துள்ளது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டு கணினி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 05 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட ஐந்தில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கணினி கல்வியறிவு
இந்நிலையில், ஐந்தில் மூன்று பேருக்கு டிஜிட்டல் கல்வியறிவு உள்ள நிலையில், அது 63.5 சதவீதமாகும் எனவும் இலங்கையில் 20.2 வீதமான குடும்பங்கள் டெஸ்க்டாப் (Desktop) அல்லது மடிக்கணினிகளைப் (Laptop) பயன்படுத்துகின்ற நிலையில், நகர்ப்புற மக்களின் கணினி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டளவில், கணினி கல்வியறிவு 4.7 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், நகர்ப்புறங்களில் அதிகபட்ச கணினி கல்வியறிவு 52.9 சதவிகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேல்மாகாணம் அதிக கணினி அறிவைப் பெற்றுள்ள அதேவேளை கிழக்கு மாகாணம் மிகக் குறைந்த கணினி அறிவைக் கொண்டுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 21 மணி நேரம் முன்