யாழில் லண்டன் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
யாழில்(Jaffna) பிரித்தானிய பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட்ட முயற்சித்த அரச பேருந்து நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், லண்டனில்(London) இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம்(20) நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளார்.
இதன்போது, பேருந்து நடத்துனர் குறித்த பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பிரித்தானிய பெண் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட ஊர்காவற்துறை காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்ததுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடன் குற்றப்பணமாக 1500 ரூபா அறவிடப்பட்டதுடன்,பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க ஊர்காவற்துறை நீதிமன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கைதான சந்தேக நபருக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்