கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சூத்திரதாரி: முடிவிலியாக தொடரும் மர்மம்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள கடையொன்றில் சிம் அட்டை ஒன்றை வாங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
மேலும், கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையைச் செய்த துப்பாக்கிதாரி அதே நாளில் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள கடையொன்றில் சிம் அட்டை ஒன்றை வாங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு முதல் நாள் அதாவது,18 ஆம் திகதி துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரும் இதற்குத் திட்டங்களை வகுத்ததாகத் தெரிவிக்கப்படும் இஷாரா செவ்வந்தியும் வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர்.
இதன்போதே குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் சிம் அட்டை கொள்வனவில் இஷாரா செவ்வந்தி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்செயலை மேற்கொள்வதற்காகத் தொடர்பாடல் நடவடிக்கையை முன்னெடுக்க அவர் இந்த சிம் அட்டையைப் பயன்படுத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில், கணேமுல்ல சஞ்சீவ பின்னணியில் இருக்கும் விடயங்களை விரிவாக ஆராய்கிறது இன்றைய ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
