வாக்களிக்கும் செயன்முறையில் மக்கள் மத்தியில் குழப்பம் : சர்வதேச கண்காணிப்பாளர்கள் கரிசனை

Election Commission of Sri Lanka Colombo Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Sathangani Sep 18, 2024 10:19 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்கு அளிக்கும் செயன்முறை தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் (Election Commission) கரிசனை வெளியிட்டுள்ளனர்

அத்துடன் பெரும்பாலான வேட்பாளர்கள் தமது சின்னத்துக்குப் புள்ளடி இடுமாறு பிரசாரம் செய்துவரும் நிலையில், இது விருப்பு வாக்களிப்பு செயன்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கண்காணிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் (EU), பொதுநலவாய அமைப்பு (Commonwealth), சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு உள்ளடங்கலாக (ANFRAL)சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பி உட்பட்ட சிலர் பிணையில் விடுதலை

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பி உட்பட்ட சிலர் பிணையில் விடுதலை

தேர்தல் கண்காணிப்புப் பணி

அதற்கமைய நாட்டுக்கு வருகை தந்திருக்கும் கண்காணிப்பாளர்கள், ஒன்பது மாகாணங்களிலும் பரந்துபட்ட முறையில் தமது தேர்தல் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வாக்களிக்கும் செயன்முறையில் மக்கள் மத்தியில் குழப்பம் : சர்வதேச கண்காணிப்பாளர்கள் கரிசனை | Confusion Among People In The Process Of Voting

இந்த நிலையில் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், பொதுநலவாய அமைப்பு மற்றும் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு ஆகியவற்றின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (17) கொழும்பில் அமைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முறைமை, வாக்கு எண்ணும் செயன்முறை என்பன தொடர்பில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தனர்.

அதேபோன்று இம்முறை விருப்பு வாக்கு அளிக்கும் முறைமை தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதை அவதானிக்க முடிவதாகவும், அதுகுறித்து தெளிவை ஏற்படுத்துவதற்கு ஆணைக்குழு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

தேர்தல் நெருங்கும் வேளை ஜே.வி.பியின் சுயரூபம் வெளியானது

தேர்தல் நெருங்கும் வேளை ஜே.வி.பியின் சுயரூபம் வெளியானது

விருப்பு வாக்களிப்பு செயன்முறை

அதற்குப் பதிலளித்த ஆணைக்குழு உறுப்பினர்கள், கிராமங்கள் தோறும் விருப்பு வாக்களிப்பு செயன்முறை குறித்து தாம் விளக்கமளித்து வருவதாகத் தெரிவித்தனர்.

வாக்களிக்கும் செயன்முறையில் மக்கள் மத்தியில் குழப்பம் : சர்வதேச கண்காணிப்பாளர்கள் கரிசனை | Confusion Among People In The Process Of Voting

இருப்பினும் வேட்பாளர்கள் சகலரும் பெரும்பாலும் தமக்குப் புள்ளடி இடுமாறு விளம்பரப்படுத்துகின்றனரே தவிர, விருப்பு வாக்கு அளித்தல் தொடர்பில் விளம்பரப்படுத்தவில்லை எனச் சுட்டிக்காட்டிய சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள், இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாதா என ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கரிசனை வெளியிட்டனர்.

மேலும் தேர்தல் பிரசார முறைகேடுகள் மற்றும் அவற்றை தேர்தல்கள் ஆணைக்குழு கையாளும் விதம் என்பன குறித்தும் பொதுநலவாய அமைப்பு மற்றும் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு ஆகியவற்றின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024