தவெகவுக்கு ஆதரவாக களமிறங்கிய முக்கிய புள்ளி
தமிழக அரசியலில் தினந்தோறும் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் தவெகவுக்கு ஆதரவாக சிதம்பரம் குரல் கொடுத்துள்ளார்.
தவெகவுக்கு பெரும்பாண்மை இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் தெரிவித்துள்ளமை களத்தில் பாரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்
"சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஆளுநரின் கடமை என்ன?
சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஆளுநரின் கடமை என்ன?
— P. Chidambaram (@PChidambaram_IN) May 8, 2026
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
இது தான் அரசியல் விதி. இது தான்…
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்
இது தான் அரசியல் விதி.
இது தான் நாடாளுமன்ற மரபு. அந்தக் கட்சியின் தலைவர் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று நிரூப்பிக்க வேண்டிய களம் சட்டமன்றம், ஆளுநர் மாளிகை அல்ல.
இது தான் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு 1994 (3) SCC 1. இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |