அதிகாரத்தை தக்கவைக்க அரசியல்வாதிகள் செய்த வேலை : அம்பலப்படுத்திய அமைச்சர்

Sri Lanka Politician Sri Lankan political crisis Ananda Wijepala
By Sathangani Feb 25, 2026 07:29 AM GMT
Report

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவி பெறப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மீரிகம காவல் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "இந்தக் குற்றச் செயல்கள் ஒரு குறிப்பிட்ட திசையிலேயே வளர்ச்சியடைந்துள்ளன. அரசியல் ஆதரவுடனேயே பாதாள உலகச் செயற்பாடுகளும் போதைப்பொருள் கடத்தலும் விரிவடைந்தன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சுரேஷ் சலே கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சுரேஷ் சலே கைது

கொலைகளுக்குக் காரணம்

இதற்குத் தனிப்பட்ட உதாரணங்கள் தேவையில்லை, அரசியல்வாதிகளே இதனை வளர்த்தெடுத்தனர். ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்கப் பாதாள உலகத்தையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

போதைப்பொருள் மூலம் ஈட்டப்பட்ட பணம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது. சில அரசியல் கட்சிகளின் கூட்டங்களை ஒழுங்கமைக்கும் பணிகளுக்குப் பாதாள உலகத்தினர் பயன்படுத்தப்பட்டமை தற்போது அம்பலமாகியுள்ளது.

அதிகாரத்தை தக்கவைக்க அரசியல்வாதிகள் செய்த வேலை : அம்பலப்படுத்திய அமைச்சர் | Connection Between Underworld Gangs And Politics

இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டு தற்போது படிப்படியாக அரசியல் தொடர்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையினர் இதனைக் கட்டுப்படுத்தத் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலகக் குழுவினரும் ஒரே தரப்பினரே. போதைப்பொருள் கடத்தலின் போது அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகள் மற்றும் மோதல்களே இந்தக் கொலைகளுக்குக் காரணமாகின்றன.

கிளிநொச்சி - பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தல்

கிளிநொச்சி - பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு அச்சுறுத்தல்

புதிய சட்டமூலம்

நாங்கள் இந்தக் கொலைகளை அங்கீகரிக்கவில்லை, அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம். வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குழுவினரை 'சிவப்பு அறிவித்தல்' மூலம் நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை அடுத்த வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதிகாரத்தை தக்கவைக்க அரசியல்வாதிகள் செய்த வேலை : அம்பலப்படுத்திய அமைச்சர் | Connection Between Underworld Gangs And Politics

இந்தச் சட்டமூலம் தற்போது முழுமையாகத் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்க்கின்றோம்.

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்“ என அவர் தெரிவித்தார்.

யாழில் தலைவிரித்து ஆடும் மீட்டர் வட்டிக் கொடுமை - அதிரடி காட்டிய தமிழ் பொறுப்பதிகாரி

யாழில் தலைவிரித்து ஆடும் மீட்டர் வட்டிக் கொடுமை - அதிரடி காட்டிய தமிழ் பொறுப்பதிகாரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..


ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021