கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பெருந்தொகை கொள்கலன்கள்
கொழும்பு துறைமுகத்தில் 13,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அமைச்சர், பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர், இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர், சுங்கத்தின் பிரதான அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்தோடு, புதிதாக கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை மேலதிக சுங்க ஆய்வு மையமாக மாற்ற வேண்டும் என்ற யோசனையும் அதன்போது முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசு நிறுவனங்களின் ஒப்புதல்
அரசு நிறுவனங்களின் ஒப்புதல் தேவைப்படும் கொள்கலன்களை புதிய யார்டில் நிறுத்தி வைக்கலாம் என சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த கூட்டத்தில் டெலிவரி ஆர்டர் தாமதங்கள் மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் கொள்கலன் இயக்க அறிவிப்புகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளிட்ட பல செயல்பாட்டு சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |