யாழில் தொடருந்து - மகேந்திரா ரக வாகனம் கோர விபத்து! ஒருவர் பலி
Accident
Jaffna
Train
SriLanka
Kodikamam
Mirusivil
By Chanakyan
கொடிகாமம் - மிருசுவிலில் குளிரூட்டப்பட்ட தொடருந்து மற்றும் மகேந்திரா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மிருசுவிலைச் சேர்ந்த எஸ்.பிரதீப் வயது - 38 என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதியே இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் பாதுகாப்பு சமிக்ஞை விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
வாகனத்தின் சாரதியே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்