நிலைமைமோசம் - எப்போதும் தொற்றலாம் கொரோனா - விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் எப்போதும் எவருக்கு வேண்டுமாக இருந்தாலும் கொரோனா தொற்றலாம் என கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களை விட அதிகமானவர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நபருக்கும் கொரோனா தொற்று ஏற்படக் கூடும் எனவே மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் நாளாந்தம் செய்யப்படும் பீசிஆர் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதன் முடிவுகள் வர கால தாமதம் ஏற்படுவதாகவும் அதனால் பீசிஆர் செய்யப்பட்டவர்கள் வீட்டில் இருந்து வௌியில் வராது பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பினால் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.