கொரோனவை தடுக்கும் புதிய மருந்து - வைரஸை உடலுக்குள் செல்லவிடாது
கொரோனவை மனித உடலுக்குள் செல்லவிடாது தடுப்பதற்கான புதிய மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழிநுட்ப அறிவியலாளர்கள், கொரோனவை தடுக்க கூடிய மெல்லிய நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.
கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம்

இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மூலக்கூறுகள், சுவாசப்பாதையிலேயே வைரசை தடுத்து விடும் என கூறப்படுகிறது.
அதன்மூலம், அது நுரையீரலை அடைவது தடுக்கப்பட்டு, கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் கண்டுபிடித்த மூலக்கூறுகள், பஞ்சு போல் செயல்பட்டு, கொரானா வைரசையும், இதர வைரஸ்களையும் உறிஞ்சி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது

அதனால், அந்த வைரஸ்கள், மேற்கொண்டு உடலுக்குள் பயணிப்பது தடுக்கப்படும். இந்த மூலக்கூறுகளை மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் 'ஸ்பிரே' போல் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
குறித்த மூலக்கூற்றை சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.
மூலக்கூறு இழைகள், சுண்டெலியின் நுரையீரலில் 24 மணி நேரம்வரை இருந்தபோதிலும், நுரையீரலில் எரிச்சலோ, பாதிப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது