புத்தாண்டு தினத்தில் கொரோனாவால் பலியானவர்களின் விபரம் வெளியானது
covid19
corona
death
By Vasanth
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு தினமான இன்று இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 320 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளர். அத்துடன் 826 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த நால்வரின் விபரங்கள்.
ஆலையடிவேம்பு பகுதியில் உள்ள 67 வயதுடைய ஆண் ஒருவரும் கொழும்பு - 14இல் வசிக்கும் 91 வயதுடைய பெண்மணியும் அகலவத்தை பகுதியில் வசிக்கும் 65 வயதுடைய ஆண் ஒருவரும், தர்கா நகரில் வசிக்கும் 63 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
Tags : #Corona Virus #Covid-19 #Death
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி