கொவிட் பலி அதிகரிப்பு! புதிதாக 464 பேருக்கு தொற்று
srilanka
corona
death
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 459 ஆக அதிகரித்துள்ளது. கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவருமே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 464 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.